கொரோனா வைரஸ் – ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் (கோவிட் -19) காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம்(புதன்கிழமை) மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸினால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புக்கள் தினமும் அதிகரித்து வருவது சீன அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயிலேயே 242 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

அத்துடன், நேற்றைய 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 840 பேர் புதிதாக நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, மொத்தமாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


Recommended For You

About the Author: ஈழவன்