வெனிசுவேலாவில் விமானத்தில் 500 கிலோ போதை பொருள் கடத்தல்

வெனிசுவேலாவில் தனி விமானத்தில் கடத்தி சென்ற 500 கிலோ கிராம் போதை பொருட்களை, அந்நாட்டு பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி சந்தேகத்திற்கு இடமாக ஒரு சிறிய ரக விமானம் பறந்து சென்றதை அவதானித்த விமான பாதுகாப்பு படையினர், துரிதமாக செயற்பட்டு விமானத்தை இடைமறித்து அருகில் இருந்த விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தனர்.

பின்னர் அந்த விமானத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் மறைத்துவைத்து கொண்டு செல்லப்பட்ட 500 கிலோ அளவிலான போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த விமானத்தை இயக்கிய பிரேஸில் நாட்டை சேர்ந்த இரண்டு விமானிகளையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

வெனிசுவேலாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 2.5 டன்கள் அளவிலான போதைபொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போதைபொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்