உத்தரப்பிரதேச பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இருந்து சுமார் 45 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்தொன்று ஆக்ரா – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தே குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்