யோகிபாபுவிற்கு தங்க செயின் அணிவித்த தனுஷ்

திருமண பந்தத்தில் இணைந்த யோகிபாபுவிற்கு நடிகர் தனுஷ் தங்க செயின் அணிவித்து திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய நம்பர் ஒன் காமெடியனான யோகிபாபு விற்கும் அவரது உறவுக்கார பெண்ணான மஞ்சு பார்கவிக்கும் சமீபத்தில் திடீரென்று திருமணம் நடைபெற்றது.

யோகிபாபுவின் குலதெய்வம் கோயிலில் நடந்த இந்த திருமணத்தில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெறகிறது. இதற்கு திரையுலக நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், திருமணத்திற்கு பிறகு தற்போது தனுசு டன் இணைந்து நடித்து வரும் கர்ணன் படப்பிடிப்பில் யோகிபாபு கலந்து கொண்டார்.

அப்போது அவரது கழுத்தில் தங்க செயின் அணிவித்து தனுஷ் திருமண வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாக்கிக் கொண்டிருக்கிறது


Recommended For You

About the Author: ஈழவன்