சியாரா புயல் – ஜேர்மனியில் 180 விமானச் சேவைகள் ரத்து

ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் சியாரா புயல் காரணமாக ஜேர்மனியில் 180 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் வடக்குப்பகுதிகளில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் வீதி மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று மோசமான வானிலை காரணமாக ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் 180 விமானங்களின் புறப்பாடு, வருகை  ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஹம்பேர்க், பேர்லின் உள்ளிட்ட இடங்களிலும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்