இலங்கையில் திடீர் என தரையிறங்கிய அதிவிசேட விமானம்!

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

உயர் தொழினுட்பத்துடன் கூடிய ZS-ASN ரகத்திலான The Basler BT-67 என்ற விமானமே தறையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம் ஒரே நேரத்தில் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும் மேலோட்டமாகவும் படம் பிடிக்கக்கூடியது.

3 நாட்கள் திட்டத்துக்காக குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள குறித்த விமானம் எதிர்வரும் 09 ஆம் திகதி இந்தியா நோக்கி செல்லவுள்ளது.

இந்தியாவுக்கு செல்லவுள்ள குறித்த விமானத்தின் பயணப்பாதை இலங்கை வழியாக திட்டமிடப்பட்டுள்ளமை அடுத்து குறித்த விமானம் இன்று தரையிறங்கியுள்ளது.

எனினும் குறித்த விமானத்தின் வருகை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை எனவும், நாட்டில் எவ்வித கண்காணிப்பு நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor