குடும்ப தகராறால் கணவன் பலி!!

கொழும்பு – தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள வீட்டிற்கு முன்பாக வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறை அடுத்து, கூரிய ஆயுதம் ஒன்றில் தன்னைதானே அவர் தாக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, காயமடைந்த நபரை மீட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதும்

மேலும் சம்பவம் தொடர்பில் , தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor