செப்டம்பரில் விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு விசாரணை!

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்திய வழக்கு செப்டம்பர் 07 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வரவுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கினை செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி மற்றும் 9 ஆம் திகதிகளில் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் எனவே வழக்கு விசாரணையை அன்றைய தினம் வரை ஒத்திவைப்பதாகவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியராச்சி அறிவித்தார்.

2009-2014 க்கு இடையில் இராஜாங்க அமைச்சராக விமல் வீரவன்ச இருந்த காலத்தில் அவரால் ஈட்டபடாத சுமார் 75 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor