கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொழும்பு நகரத்தை அண்மித்த பகுதிகளில் வளிமண்டலத்தில் தூசு துகல்களின் செறிவு தற்போதைய நாட்களில் மீண்டும் அதிகரித்திருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையை கொழும்பு மற்றும் கண்டி நகரங்களில் அவதானிக்கக் முடிவதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

தற்போதைய வறட்சியான காலநிலையுடன், மேலும் சில தினங்களில் வளிமண்டலத்தில் தூசு துகல்களின் செறிவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆசிய நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள வளி மாசடைவு தன்மையும் இதற்கு காரணமாக அமைவதாகவும் ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor