சஜித் கட்சியின் தேசிய அமைப்பாளராகும் சம்பிக்க!

எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான “சமகி ஜன பலவேகயவின்” தேசிய அமைப்பாளர் பதவிக்காக பாட்டளி சம்பிக ரணவக்கவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாட்டளி சம்பிக ரணவக்க படித்த, புத்திசாலியான, திறமையான மற்றும் பிரபலமான அரசியல்வாதி ஆவார் .

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரத்தின் பொறுப்புகளைக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சஜித்தின் புதிய கட்சியின் அமைப்பாளராக சம்பிக ரணவக்கவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor