பெற்ற தாயை தாக்கிய குடிகார மகன்

மது போதையில் வந்த மகன் உணவு கேட்டு தாயை தாக்கியதில் தாய் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி கற்குளி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது ,
நிறை மது போதையில் வீட்டுக்கு நள்ளிரவு வந்த மகன் உணவு தருமாறு தாயாரை கோரியுள்ளார் , உணவு இல்லை என தாயார் கூறியதும் இருவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்ட போது வாய் தர்க்கம் முற்றி மகன் தாய் மீது சரமாரியாக கை மற்றும் கால்களால் தாக்கி உள்ளார்.
மகனின் தாக்குதலினால் வலி தாங்காது தாய் அவல குரல் எழுப்பியதும் அயலவர்கள் சென்று தாயை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு தாய் மாற்றப்பட்டார்.
தாயை தாக்கிய மகன் தற்போது தலைமறைவாகி உள்ளார் என அயலவர்கள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: ஈழவன்