மலையகத்தில் மாபெரும் சித்திரக் கண்காட்சி!

மலையகத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான மாபெரும் சித்திரக் கண்காட்சி, பத்தனை ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் ஆரம்பமானது.

கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், ஹற்றன் கல்வி வலயத்தின் உயரதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

‘முகவரி வர்ணப்பிரவாகம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த சித்திரக் கண்காட்சியை, தமிழ் பிரிவு மாணவர்களே ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களின் கடின உழைப்பாலேயே மலையகத் தமிழர்களின் வாழ்வியல் ஓவியங்களாக காட்சியளிக்கின்றன.

இந்தக் கண்காட்சி  எதிர்வரும் 14ஆம் திகதிவரை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறும் என விழா ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor