புதிய கட்சி ஐ.தே.கவின் எதிர்கால கரும்புள்ளி!!

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் போது அல்லது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றும்போது ஐக்கிய தேசிய கட்சியின் அடையாளத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த கடிதம் ஐக்கிய தேசியக்கட்சியின் சட்ட செயலாளர் ஜனாதிபதியின் ஆலோசகர் நிசங்க நாணயக்காரவினால் அனுப்பப்பட்டுள்ளது.

சமகி ஜாதிக பலவேகய எனும் பெயரில் பதிவு செய்ய அனுமதி கேட்டுள்ள அரசியல் கட்சியின் பெயர் காரணமாக UNPயின் எதிர்க்காலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிடுகையில் United Naional Power என பயன்படுத்துவதாகவும் அதன் சுருக்கம் UNP என தமது கட்சியின் சுருக்கப்பெயருடன் (UNP) சமமாகுவதால் அது தமது கட்சியின் எதிர்காலத்திற்கு கரும்புள்ளியாக மாறும் என நிசங்க நாணயக்கார தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சமகி ஜாதிக பலவேகய எனும் அரசியல் கட்சிக்காக பதிவு வழங்கவேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் ஆணைக்குழுவில் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor