டிப்பர் வாகனத்தில் கடத்தப்பட்ட கஞ்சா சிக்கியது

மானிப்பாயில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, வீதியால் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றில் இருந்து 100 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் காரைநகர்- யாழ்ப்பாணம் வீதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் டிப்பர் வாகனம் ஒன்று பயணித்துள்ளது.

டிப்பர் வாகனத்தை சிறப்பு அதிரடிப் படையினர் வழி மறுத்துள்ளனர்.அப்போது சாரதி டிப்பர் வாகனத்தை நடு வீதியில் கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

டிப்பர் வாகனத்தை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப் படையினர் அதற்குள் இருந்து 100 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் டிப்பர் வாகனம் ஆகியன மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வாகனத்தின் உரிமையாளர் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதோடு கைப்பற்றப்பட்ட100 கிலோ கிராம் கஞ்சா மற்றும் டிப்பர் வாகனத்தினை மல்லாகம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்


Recommended For You

About the Author: ஈழவன்