யாழ்.பல்கலை மாணவிகளின் அலைபேசிகளை திருடியவர்கள் கைது.

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன.

அவை தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்திய யாழ்ப்பாணம் பொலிஸார் நல்லூர் பின் வீதியில் உள்ள இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததுடன் திருட்டுப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நகரப்பகுதியில் அலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவர் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகளை திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்


Recommended For You

About the Author: ஈழவன்