இந்தியப் பிரதமருக்கு புகழாரம் சூட்டிய ட்ரம்ப்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர் எனவும் நல்ல நண்பர் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய வருகையின்போது ஆமதாபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில் தனது இந்திய வருகை குறித்து ட்ரம்ப் கூறுகையில், “நான் இந்தியா செல்கிறேன். விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடக்கும் மைதானம் வரை 5 முதல் 7 இலட்சம் பேரை வரவேற்பிற்காக நிறுத்தி வைக்க பிரதமர் மோடி நினைப்பார்.

பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். அவர் மிகச் சிறந்த மனிதர். நான் இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இம்மாத இறுதியில் இந்தியா செல்லவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்