நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரிப்பு

நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜானக ஹந்துன் பத்திராஜ இதனைத் தெரிவித்துள்ளார்.

பதுளை, மொனராகலை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு எவரேனும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கண்டி – ஹந்தான மலைக்குன்றில் தீ பரவக்கூடிய பகுதிகளுக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலைக்குன்றுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கையால் தீ பரவல் சம்பவங்கள் பதிவாவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹந்தான மலைக்குன்றில் ஒரு வாரமாக இடைக்கிடையே சில பகுதிகளில் தீ பரவியதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்