கொரோனா வைரஸுக்கு புதிய பெயர்

கொரோனா வைரஸுக்கு covid-19 என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி 18 மாதங்களில் தயாரிக்கப்படும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரத்து 110 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 42 ஆயிரத்து 638 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் ஹுபெய் மாகாணம் வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் சீனா முழுவதும் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

வூஹான் மற்றும் சுற்று வட்டார நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சுமார் 6 கோடி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்