இதயமா? யானையா? மூண்டது குழப்பம்!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பி​ரேமதாஸ தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணியின் சின்னம் ​தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்றையதினம் இடம்பெற்ற செயகுழு கூட்டத்தில் “இதயமே” சின்ன​ம் என சஜித் அணியினரும், “யானையே” சின்னமாக இருக்கவேண்டும் என ரணில் அணியினரும் முரண்டு பிடித்துள்ளனர்.

இதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து வாக்குவாதங்கள் முற்றியமையால், சஜித் பிரேமதாஸ, செயற்குழுவிலிருந்து இடைநடுவில் எழுந்து சென்றுவிட்டதாகவும் தெரியவருகின்றது.

இதன்போது ரஞ்சித் மத்தும பண்டாரவை புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கு செயற்குழுவில் ஏகமனதாக அங்கிகாரம் அளிக்கப்பட்டாலும், தலைமைத்தும் மற்றும் செயலாளருக்கான முழுமையான அதிகாரம் வழக்கவேண்டும் என சஜித் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தன்னை வைத்துகொண்டு, பொம்மலாட்டம் ஆடுவதற்கு இனியும் இடமளிக்க மாட்டேன் என ரணிலிடம் கூறிவிட்டே, சஜித் பிரேமதாஸ, இடைநடுவில் எழுந்து சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor