கல்முனை வீடொன்றின்மீது குண்டுதாக்குதல்

அம்பாறை – கல்முனை பிரதேசத்தில் இன்று அதிகாலை குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்பதுடன், வீடொன்று பகுதியளவில் சேதமடைந்ததாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை – இஸ்லாமாபாத் என்கிற பிரதேசத்திலுள்ள வீடொன்றை இலக்கு வைத்து இனந்தெரியாத நபர்கள் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பிரதேசத்தில் படையினர் குவிக்கபட்டதால் பதற்றநிலை ஏற்பட்ட போதிலும் தற்போது வழமைக்கு திரும்பியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor