திருமண வாழ்வில் நுழைந்த `செம்பருத்தி’ வில்லி பாரதா!!

`செம்பருத்தி’ சீரியலில் நெகடிவ் ரோலில் வந்து, சீரியல் ரசிகர்களிடம் வசவாய் வாங்கிக்கொண்டிருக்கும் பாரதாவுக்கு நிஜ வாழ்வில் கடந்த வாரத்திலிருந்து ஒரே வாழ்த்து மழை.

திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளார். பிப்ரவரி ஏழாம் தேதி திருவண்ணாமலையில் இவரது திருமணம் நடைபெற்றது. சின்னத்திரை நட்சத்திரங்களுக்காக நேற்று முன்தினம் (9/2/2020) சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வரவேற்பில் ஹீரோயின் சபானா, ‘ஊர்வம்பு’ லக்ஷ்மி, கதிர் உள்ளிட்ட `செம்பருத்தி’ சீரியலின் பிரபலங்களுடன் போஸ் வெங்கட்-சோனியா உள்ளிட்ட ஏராளமான சின்னத்திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். வாழ்த்துச் சொல்லி பாரதாவிடம் பேசினோம்.

“ ரொம்பவே உற்சாகத்துல இருக்கேன். இன்னும் மூணு நாள்ல `லவ்வர்ஸ் டே’ வரப்போகுது. போன காதலர் தினத்தப்ப, `அடுத்த வருஷம் இந்நேரம் புருஷன் பொண்டாட்டியா இருப்போம்’னு நினைச்சுக் கூடப் பார்த்திருப்போமா? காதல் கல்யாணம் வரைக்கும் வந்து எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருக்கு. யெஸ், எங்களோடது லவ் கம் அரேஞ்ச்ட் மேரேஜ்” என்றவர்,

`காதல் கல்யாணத்துல முடிஞ்ச சந்தோஷத்தை விட இன்னொரு விஷயம்தான் அதிக சந்தோஷத்தைத் தருது’ என்றார். இருவருக்குமான பெயர் ஒற்றுமையாம் அது.

சொந்தக்காரங்க, ஃப்ரண்ட்ஸ்லாம் நம்ப மறுக்கிறாங்க. ‘பொய் சொல்லாமச் சொல்லுங்க, யாரோ ஒருத்தர் வம்படியா பெயரை மாத்தி வச்சிருக்கீங்கதானே’னு கேக்கறாங்க.

ஆனா அதுதான் இல்லை. அவரோட பெயரை முதன்முதலா என் காதுகள்ல கேட்டப்ப, எனக்கே ஆச்சர்யம்தான். என் பெயரைக் கேட்டப்ப அவருக்கும் அதே ஆச்சர்யம்’ என்கிறார்.

`அப்படி என்ன பெயர்’ என்றதும் அவர் பெயர் `பாரத்; `பாரத் – பாரதா’.. ஆச்சர்யம்தானே’ என சிலிர்த்துச் சிரிக்கிறார்


Recommended For You

About the Author: Editor