யாழ்ப்பாணம் எதை நோக்கி செல்கின்றது ?

மற்றவர்களுக்கு தீமையளிக்க கூட நினைக்காத எமது சமூகம் இன்று தீமையை நோக்கி செல்வதை பார்க்கும் போது, எனக்கு மிகுந்த மனக்கவலையாக இருக்கின்றது என வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.
யாழில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஊடகங்களுடன் இணைந்து செயற்படவே விரும்புகின்றேன். வடமாகாண மக்களுக்கான சேவைகளை என்னால் மாத்திரம் தனியே முன்னெடுக்க முடியவில்லை எல்லோருடைய ஒத்துழைப்புடன் முன்னெடுக்கவே விரும்புகின்றேன் .
ஒரு விடயத்தை செய்யும் போது அதன் சாதக , பாதக விடயங்களை கலந்தாலோசித்து ஒரே பாதையில் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்போம்.
மக்களுக்கு கிடைக்கவேண்டியது, கிடைக்காம இருப்பதனை பெற்றுக்கொடுக்க வேண்டும். எனது குறுகிய காலத்திற்குள் மக்களுக்கான சேவைகளை துரித கெதியில் முன்னெடுப்பேன். அரசியல் என்பது எனக்கு அப்பாற்பட்டது. எனக்கு ஆக்கபூர்வமான செயற்த்திட்டதை முன்னெடுப்பதே என நோக்கம்.
யாழ்பாண மக்களுக்கு கலாச்சாரம் சொல்லிக்கொடுக்க தேவையில்லை. ஆனால் இன்று இந்த நிலமை இங்கில்லை என்றே தோன்றுகின்றது.
தேசவழமை சட்டத்தின் கீழ் மற்றவர்களுக்கு தீங்கில்லாமல் வாழ்ந்தவர்கள் இன்று தீமையை நோக்கி செல்கின்றது. இதனை தடுத்து நிறுத்துவதே எனது நோக்கம். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Recommended For You

About the Author: ஈழவன்