கிளிநொச்சி வளாக பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கவில்லை.

யாழ் . பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பகிடிவதை நடைபெற்றதாக வெளியான செய்திகள் தொடர்பில் எனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என வடமாகாண ஆளூநர் தெரிவித்தர்.
தனது அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்.பல்கலை கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதைகள் நடைபெற்றமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதில் சில தடங்கள் உள்ளன.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் ஒருவர் முறைப்பாடு செய்தால் , அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆவண செய்வேன்.
பாதிக்கப்பட்ட தரப்பு தைரியமாக முன்வந்து முறைப்பாடு செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கினால் குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என தெரிவித்தார்

Recommended For You

About the Author: ஈழவன்