15 ஆண்கள் முன்னால் நிர்வாணமாக நின்ற அமலபால்

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆடை’. இப்படத்தை ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ளதால் தணிக்கை குழு இப்படத்திற்கு ”ஏ” சான்றிதழ் அளித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 19 ஆம் திகதி திரைக்கு வருகிறது. ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அமலாபால் பேசியதாவது:

இப்படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நீண்ட பயணம் அழகிய பயணமாக இருந்தது. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். படம் அனைத்­தும் , பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி அதிலிருந்து எப்­­படி மீள்கிறாள் என்ற கருவை கொண்டதாகவே இருக்கிறது.

இத்தகைய கதையில் உடன்பாடில்லாமல் படம் நடிப்­பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் ஆடை படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது.

உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணி­யாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன்.

அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம். ஒரு காட்சியில் நடிக்கும்போது நீங்கள் யாரோ போல நடிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று கூறினார்.

‘ஆடை’ படத்தில் நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், அந்த காட்சியின் படப்பிடிப்பின்போது எனக்கு படபடப்பாக இருந்தது.

ஆனால் படக்குழுவினர் எனக்கு முழு பாதுகாப்பு அளித்தனர்.

அந்த காட்சி படமாக்கப்பட்டபோது கெமரா மற்றும் லைட்டிங் குழுவில் உள்ள 15 பேர் தவிர அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பாஞ்­சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான் பாதுகாப்பாக இருந்தனர்.

ஆனால் எனக்கு இந்த 15 பேரும் கணவர்கள் போல தேவை­யான முழு பாதுகாப்பை அளித்தனர்.

இந்த அளவுக்கு அவர்கள் எனக்கு பாதுகாப்பு தரவில்லை என்றால் என்னால் அந்த காட்சியில் நடித்திருக்கவே முடியாது.


Recommended For You

About the Author: ஈழவன்