வெனிசுவேலா வன்முறையில் கைதிகள் உயிரிழப்பு

வெனிசுவேலா நாட்டு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில், 29 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 20ற்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெனிசுவேலாவின் வடமேற்கு பகுதியில் உள்ள அகேரிகுவா நகரத்தில் உள்ள சிறைச்சாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வன்முறை சம்பவத்திற்கு காரணமான வில்பிரடோ ரமோஸ் என்பவர் பொலிஸாரினால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைதிகளை பார்வையிட வருகை தந்த சிலரை பணயக் கைதிகளாக கைதிகள் பிடித்து வைத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட போதே இந்த வன்முறை சம்வம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


Recommended For You

About the Author: Editor