கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆணைக்குழுவில் ஆஜர்!!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்று நண்பகல் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அட்மிரல் கரன்னாகொட இன்று அழைக்கப்பட்டிருக்கின்றார்.

கொழும்பு தெஹிவளை, மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் 2008,2009களில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளைவேனில் கடத்தி காணாமலாக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் அட்மிரல் வசந்த கரன்னாகொடவும் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இவ்வாறு குறித்த வழக்கு விசாரணைக்கு சந்தேக நபராக பெயரிடப்பட்டு விசாரணை நடத்தப்படுகின்றமை தன்னை அரசியல் வழிவாங்கலுக்கு உட்படுத்துவதற்கான நோக்கமாகும் என கடற்படைத் தளபதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor