உறவுக்கு மறுத்த கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி

தன்­னுடன் பாலியல் உறவு கொள்ள மறுத்த கண­வனின் ஆணு­றுப்பை மனைவி வெட்டித் துண்­டித்த சம்­பவம் உகண்­டாவில் இடம்­பெற்­றுள்­ளது.

உகண்­டா­வின் அபாக் மாவட்­டத்­தி­லுள்ள கிரா­ம­ மொன்றில், கடந்த மாதம் 30 ஆம் திகதி இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

46 வய­தான மோசஸ் ஒகொட் என்­ப­வரின் ஆணுப்பை அவரின் மனைவி பிறட்றிஸ் (35) அசென் கத்­தியால் துண்­டித்­துள்ளார்.

தனது மனைவி மது­பானம் அருந்­திவிட்டு போதை­யுடன் வீட்­டுக்கு வரு­வதால் அவ­ருடன் தான் பாலியல் உறவு கொள்ள மறுத்து வந்­த­தாக மோசஸ் ஒகொட் தெரி­வித்­துள்ளார்.

தற்­போது வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வரும் மோசஸ் ஒகொட் இது தொடர்­பாக கூறுகையில், ‘நான் மிருக வேட்­டைக்குச் சென்­று­விட்டு இரவு 7 மணி­ய­ளவில் வீடு திரும்­பினேன்.

எனது மகள் எனக்கு உணவு பரி­மா­றினாள். அதன்பின் நான் உறங்­கு­வ­தற்குச் சென்­று­விட்டேன். எனது மனைவி இரவு 10 மணி­ய­ளவில் வீடு திரும்பி சத்­த­மிட்டாள். நான் கதவை திறந்­து­விட்டேன்.

பின்னர், நான் ஆழ்ந்து உறங்கிக் கொண்­டி­ருந்­த­போது, வலியை உணர்ந்து விழித்­தெ­ழுந்தேன். எனது காற்­சட்டை இரத்­தத்­தினால் ஈர­மா­கி­யி­ருந்­தது’ எனத் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக மோசஸ் ஒகொட் மேலும் கூறு­கையில், ‘எனது மனைவி மது அருந்­து­வது தொடர்­பாக நீண்ட கால­மாக அவ­ளுடன் முரண்­பா­டுகள் இருந்­தன.

இப்பெண் அதிக மது­போ­தை­யுடன் வீடு திரும்­புவார். தினமும் என்ற வகையில் நான் இனியும் இதை சகித்­துக்­கொள்­வ­தில்லை எனத் தீர்­மா­னித்தேன். அவ­ளுக்­கான தண்­ட­னை­யாக அவள் மதுப் பழக்­கத்தை கைவிடும் வரை அவ­ளுடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தில்லை என நான் தீர்­மா­னித்தேன். அவள் எப்­போதும் பாலியல் உற­வுக்கு அழைப்பாள்’ என்றார்.

இத்­தம்­ப­தி­யினர் திரு­ம­ண­மாகி 10 வரு­டங்­க­ளா­கின்­றன. இவர்­க­ளுக்கு 5 பிள்­ளைகள் உள்­ளனர்.கிரா­மத்தின் தலை­வ­ரான அந்­தனி ஒக்வால் இது தொடர்­பாக கூறு­கையில், மேற்­படி தம்­ப­தி­யினர் நீண்­ட­கா­ல­மாக மோதல்களில் ஈடுபட்டதாகவும், தனது கணவர் பாலியல் உறவுக்கு மறுப்பது குறித்து அப்பெண் பல தடவைகள் முறைப்பாடு செய்திருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்