பிரித்தானியாவில் மேலும் நான்கு பேருக்கு கொரோனாவால்

பிரித்தானியாவில் மேலும் நான்கு பேருக்கு, வைரஸ் பாதிப்பு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தலில் வைக்கவேண்டும் என அரசாங்கம் புதிய அறிவிப்புக்களை வெளியிட்ட நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ், பொதுச் சுகாதாரத்திற்கு தீவிரமான மற்றும் உடனடி அச்சுறுத்தல் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை விவரித்துள்ளது.

எனினும் இங்கிலாந்தில் ஆபத்து நிலை மிதமானதாகவே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், சீனாவில், 40,000 க்கும் மேற்பட்ட வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீனாவில் இதுவரையில் இறப்புகளின் எண்ணிக்கை 908 ஆக உள்ளது.

எனினும் அங்கு நாளுக்கு நாள் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor