சமூக ஆர்வலர் முகிலன் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய பாலியல் துஷ்பிரயோக முறைப்பாட்டின் அடிப்படையில் சமூக ஆர்வலர் முகிலன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போயிருந்த முகிலன், திருப்பதியில் மீட்கப்பட்டு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் அவர் கைதாகியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ராஜேஸ்வரி (வயது 37), கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து முறைப்பாடு செய்தார்.

முகிலன் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோம் செய்ததாக குறித்த பெண் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்தவகையில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரைக் கைதுசெய்ய குளித்தலை பொலிஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போயிருந்த முகிலன் திருப்பதியில் மீட்கப்பட்டுள்ளதால் அவரை கற்பழிப்பு வழக்கில் கைதுசெய்ய குளித்தலை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சென்னை அழைத்துவரப்பட்ட முகிலனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சமூக ஆர்வலரான முகிலன் கூடங்குளம் அணுவுலை ஆலைக்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor