அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி!

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் உரையாற்றும் முன்பாக இந்திய அரசியல் சாசனத்துக்கு தலை தாழ்த்தி வணக்கம் செலுத்தினார் மோடி.

டெல்லியில் நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணியின் தலைவராக- பிரதமர் பதவிக்கு மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஏற்புரை நிகழ்த்தினார். தமது உரையை தொடங்குவதற்காக அங்கே வைக்கப்பட்டிருந்த இந்திய அரசியல் சாசனத்துகை சிரம் தாழ்த்தி வணங்கினார்.

அப்போது முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் கரவொலி எழுப்பி உற்சாகம் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: Editor