இலங்கை மக்களுக்கான பரிசு – அமெரிக்கா!

மிலேனியம்  என்பது இலங்கை மக்களுக்கு அமெரிக்க மக்கள் வழங்கும் பரிசு என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் குறித்து பதிவேற்றியுள்ளது.

மேலும் மிலேனியம் உடன்படிக்கை குறித்து போலியான தகவல்கள் தற்போது பரப்பப்படுவதாகவும் தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மிலேனியம்  உடன்படிக்கை குறித்து ஜனநாயக ரீதியில் செயற்படாவிடின், பின் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த உடன்படிக்கை தொடர்பாக தென்னிலங்கை பத்திரிகை ஒன்றிற்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

மிலேனியம் உடன்படிக்கை ஊடாக,  காணி உரிமை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் தனியார் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கான வாடகையைப் பெற்று அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் இயலுமை காணப்படுவதாக தூதரக அதிகாரி  குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உடன்படிக்கையின் ஊடாக இலங்கையின் காணிகளை கையகப்படுத்துவதற்கு அமெரிக்கா தயாராவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணி குறித்து ஆராயும் மற்றும் நிர்வகிக்கும் இயலுமை இலங்கை அரசாங்கத்திற்குள்ளது எனவும்  அமெரிக்க தூதரக அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor