ஜனாதிபதியின் புதிய பாதுகாப்பு அமைப்பு!!

பாதுகாப்பு அமைச்சுனால் பாதுகாப்பு தொடர்பான புதியதோர் அமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த விசேட பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் அடிப்படையிலேயே இந்த பிரிவு அமைக்கப்படவுள்ளது.

குறித்த இந்த விசேட அமைப்பிற்கு மேஜர் ஜெனரல் தர்ஷன எட்டியாராச்சி தலைமை தாங்கவுள்ளார்.

இந்த பிரிவின் கீழ் பல நூற்றுகணக்கான இராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டு, அமைப்பின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சர்வதேச பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்களை தடுப்பதற்கும், உள்ளூரில் செயற்பட்டு கொண்டிருக்கும் மதவாத தீவிரவாத குழுக்களை கட்டுப்படுத்துவதற்கும் அல்லது அவர்களை கண்காணிப்பதற்குமாக இந்த விசேட பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதற்கான வர்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor