போதை ஏறி புத்தி மாறி திரைப்படத்தின் டிரெய்லர்!!

அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் தீரஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

குறும்படங்களில் நாயகனாக நடித்த தீரஜ் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் ராதாரவி, சார்லி, சுவாமிநாதன், துஷாரா, ப்ராதாயினி, அஜய், மீரா மிதுன், மைம் கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாலசுப்பிர மணியம் ஒளிப்பதிவு செய்ய இத்திரைப்படம் இம் மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தினை ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, இசையமைப்பாளர் கே. பி இசையமைத்துள்ளார்.

படத்தின் தலைப்பே மொத்த கதையையும் கூறுவது போன்று அமைந்துள்ளது.

அதேநேரம் இத்திரைப்படம் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாகும். போதை மயக்கம் பல மனிதர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் இல்லாமல் செய்து அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாக திசை திருப்புகிறது என்பதே இதன் கதையாகும்.


Recommended For You

About the Author: Editor