முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டு

லண்டன் : விராட் கோலியை சிறந்த கேப்டன் என வர்ணித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர்.

2௦19 உலகக்கோப்பை தொடரில் எந்த கேப்டன்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது குறித்து கேட்ட போது, விராட் கோலியை குறிப்பிட்டுள்ளார் ஆலன் பார்டர்.

இந்த உலகக்கோப்பையில் முக்கிய கேப்டன்கள் என மூன்று பெயர்களை குறிப்பிட்டார் பார்டர். அவர்களை வரிசைப்படுத்த மறுத்த அவர், கோலி குறித்து தான் அதிகம் புகழ்ந்து பேசினார்.

விராட் கோலி வித்தியாசமான கேப்டன். அவர் கொஞ்சம் மூர்க்கத்தனமான வீரர். தன் இதயத்தை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்று கோலி பற்றி வித்தியாசமான கருத்துக்களை கூறினார் பார்டர்.

மேலும், கோலி எதுவாக இருந்தாலும் முகத்தில் அதை காட்டிவிடும் கேப்டன் எனவும் கூறி, பலரும் பாதகமாக கூறும் விஷயத்தை சாதகமான விஷயமாக பாராட்டி பேசினார்.

விராட் கோலிக்கு அடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் இருவரையும் பாராட்டி, இவர்கள் மூவரும் தான் உலகக்கோப்பையில் முக்கியமாக கவனிக்கத்தக்க கேப்டன்கள் என கூறினார் ஆலன் பார்டர்.

ஆலன் பார்டர் விராட் கோலி குறித்து சாதகமாக பேசினாலும், இந்திய ரசிகர்கள் பலரே அவரது செயல்களை நல்ல கேப்டனுக்குரியவையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor