மாஃபியா’ ஆட்டம் ஆரம்பம்!

அருண் விஜய் நடிக்கும் மாஃபியா படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
நரகாசூரன் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருந்த கார்த்திக் நரேன், கால தாமதம் நீடித்ததால் அடுத்த படத்திற்கு கவனம் செலுத்தத் தொடங்கினார்.
அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் மாஃபியா என்ற டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், மாஃபியா படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. தொடர்ந்து 37 நாட்கள் நடக்கும் படப்பிடிப்புடன் நிறைவடையவுள்ளது மாஃபியா ஷூட்டிங்.
மேலும் இப்படத்தின் கதையைக் கேட்ட அருண் விஜய் எவ்வித மாற்றமும் கூறாமல் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டியளித்த கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.
பிரியா பவானி சங்கர் அருண் விஜய் படத்தில் முதல் முறையாக நாயகியாக நடிக்கவுள்ளார்.
பிரசன்னா முக்கியமான பாத்திரத்தில் இதுவரை நடிக்காத வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கின்றாராம். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.
அருண் விஜய் பிரபாசுடன் தெலுங்கில் நடித்த சாஹோ, ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. பாலாவின் உதவி இயக்குநர் விவேக் இயக்கத்தில் பாக்ஸர் படத்திலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
நேற்று(ஜூலை 5) வெளியான அருண் விஜய்-ரித்விகா சிங் நடித்த பாக்ஸர் பட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டானது

Recommended For You

About the Author: Editor