எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இசை நிகழ்வு – பலத்த இராணுவ பாதுகாப்பு

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று மாலை 7மணியளவில் படையினரின் அனுசரணையில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சிக்கு பெருமளவு படையினரின் பாதுகாப்புடன் வழங்கப்பட்டுள்ளது.

நகரசபையைச்சுற்றி பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்புடன் இலங்கை இராணுவத்தின் 56படைப்பிரிவின் அனுசரணையில் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இதேவேளை குறித்த இசை நிகழ்விற்கு எதிராக இன்று நகரசபை மைதானத்திற்கு அருகே கடந்த 868 நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தாய்மார்களினால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையிலும் படையினர் தமது இசை நிகழ்வுகளை நடாத்துவதற்கான துரித நடவடிக்கைகளை ஆயுதம் தாங்கிய இராணுவம், பொலிஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றதை காணமுடிந்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்