டீசரில் நிர்வாணம், டிரைலரில் லிப்கிஸ்: ‘ஆடை’ அமலாபால் அதிரடி

ஆடை’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானபோது அதில் இடம்பெற்றிருந்த நிர்வாண காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று வெளியாகியுள்ள டிரைலரில் அமலாபாலின் லிப்கிஸ் காட்சி இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

அமலாபால் நடித்த ‘ஆடை’ திரைப்படத்தின் டிரைலரை இன்று பிரபல பாலிவுட் நடிகரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் வில்லனுமான அனுராக் காஷ்யப் வெளியிட்டார். இந்த டிரைலரின் ஒரு காட்சியில் அமலாபால் மற்றும் விஜே ரம்யா ஆகிய இருவரும் லிப்கிஸ் கொடுப்பது போன்ற ஒரு காட்சி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

மேலும் இந்த படத்தில் அமலாபால் கேரக்டர் திமிர்பிடித்த, துணிச்சலான , கலைநயமிக்க என மூன்று குணங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இத்தனை தைரியமான கேரக்டரை முதல்முறையாக ஏற்று அமலாபால் நடித்துள்ளதால் அவருக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் திரையுலகினர் கூறி வருகின்றனர்.,


Recommended For You

About the Author: Editor