
இயக்குனர் சற்குணம் இயக்கிய ‘வாகை சூடவா’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை இனியா அதன் பின்னர் ‘மெளன குரு’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்பட பல வெற்றி படங்களில் நடித்தார்.
தற்போது நடிகை இனியா தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் ‘மியா’ என்ற ஒரு மியூசிக் ஆல்பத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த வீடியோவை நடிகர் விஜய்சேதுபதி சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவருக்கு கைகொடுத்துள்ளார்.
நான் இந்த பூமியில் பிறந்தது ஏன் என்று விளங்கிடுமே’ என்று தொடங்கும் இந்த மியூசிக் ஆல்பத்திற்கு அஸ்வின் ஜான்சன் இசையமைத்துள்ளார். கோவர்தன் பழனிசாமி பாடல் வரிகளை சயோனாரா பிலிப் என்பவர் பாடியுள்ளார். இந்த மியூசிக் ஆல்பம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது