பாஞ்சாலிக்கு 5 , எனக்கு 15 கணவர்கள்: அமலாபால்

அமலாபால் நடித்த ‘ஆடை’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது,. இந்த விழாவில் அமலாபால் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அமலாபால் பேசியதாவது.

எனக்கு சமீபகாலமாக வந்த கதைகள் எல்லாம் பெண்கள் குறித்த பொய்யான கதைகளே வந்தது. அதனால் ஒரு கட்டத்தில் நான் சினிமாவில் இருந்தே விலகிவிடலாம் என்று நினைத்தேன்.

அப்போதுதான் இயக்குனர் ரத்னகுமார் ‘ஆடை’ கதையை கூறினார். கதையை கேட்டதும் நான் முதலில் அவரிடம் கேட்ட கேள்வி, இந்த கதை எந்த ஆங்கில படத்திலாவது வந்துள்ளதா? என்பதுதான்.

ஆனால் அவர் இந்த கதை தனது சொந்தக்கதை என உறுதியாக கூறியபின்னரே நடிக்க சம்மதித்தேன்.

இந்த படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் போல்டாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும் அந்த காட்சியின் படப்பிடிப்பின்போது எனக்கு படபடப்பாக இருந்தது. ஆனால் படக்குழுவினர் எனக்கு முழு பாதுகாப்பு அளித்தனர். கேமிரா மற்றும் லைட்டிங் டீமில் உள்ள 15 பேர் தவிர அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் எனக்கு இந்த 15 பேர்களும் கணவர்கள் போல தேவையான முழு பாதுகாப்பை அளித்தனர். இந்த அளவுக்கு அவர்கள் எனக்கு பாதுகாப்பு தரவில்லை என்றால் என்னால் அந்த காட்சியில் நடித்திருக்கவே முடியாது. இவ்வாறு அமலாபால் பேசினார்.


Recommended For You

About the Author: Editor