‘அறம் 2’ படத்தின் நாயகி நயன்தாராவா? சமந்தாவா?

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அறம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கம்பீரமான கலெக்டர் வேடத்தில் நடித்த நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

நயன்தாராவுக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தது கூட இந்த படத்தால்தான் என்றும் கூறலாம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால் நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார்’, விஜய்யுடன் ‘பிகில்’, சிரஞ்சீவியுடன் ‘சயிர நரசிம்ம ரெட்டி’ மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருவதால் பிசியான ஷெட்யூல்களுக்கு இடையே ‘அறம் 2’ படத்தில் அவர் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது

இந்த நிலையில் கோபிநயினார் இயக்கும் அடுத்த படத்தில் சமந்தா நடிக்கவிருப்பதாகவும், இந்த படம் தான் ‘அறம் 2’ என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால் கோபிநயினாருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த தகவலின்படி கோபிநயினார் இயக்கத்தில் சமந்தா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவது உண்மைதான் என்றும் ஆனால் இந்த படம் ‘அறம் 2’ இல்லை என்றும் இது வேறு கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்பட்டது.

மேலும் ‘அறம் 2’ திரைப்படம் நயன்தாரா இல்லாமல் நிச்சயமாக இல்லை என்றும் கோபிநயினார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது


Recommended For You

About the Author: Editor