ஜேடிஎஸ், காங். எம்.எல்.ஏக்கள் 11 பேர் கூண்டோடு ராஜினாமா- கவிழ்கிறது குமாரசாமி அரசு!

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 11 பேர் ராஜினாமா கடிதங்களை சட்டசபை செயலாளரிடம் கொடுத்துள்ளனர்.

இதனால் கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்து வருகிறது.

லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்திகள் வெடித்தன. இதனால் கர்நாடகாவில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என விரக்தியோடு பேட்டி அளித்தார் தேவகவுடா.

பின்னர் காங்கிரஸ் அளித்த உறுதிமொழியால் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் தேவகவுடா.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் மற்றும் மத்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் 11 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் குமாரசாமி அரசு எந்த நேரத்திலும் கவிழக் கூடும் என்கிற நிலை உருவாகி உள்ளது.


Recommended For You

About the Author: Editor