இலங்கையை 7 விக். வித்தியாசத்தில் வென்ற இந்தியா

உலக கோப்பையில் தமது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அசத்தலாக வீழ்த்தி இருக்கிறது.

உலக கோப்பை தொடரின் 44வது லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கையின் தொடக்க வீரர்களாக கருணரத்னே, பெரேரா களம் இறங்கினார். கேப்டன் கருணரத்னே 10 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதை தொடர்ந்து பெரேரா 10, பெர்னாண்டோ 20, மென்டிஸ் 3 ரன்களில் அவுட்டாகினர். 55 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இலங்கை திணறியது.

அணியை மீட்ட ஜோடி

அணியை மீட்ட ஜோடி

விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது மேத்யூஸ், திரிமன்னே ஜோடி கை கோர்த்தது. அணியை அவர்கள் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் நிதனமாக ஆடி ரன்விகிதத்தை சீராக உயர்த்தினர். திரிமன்னே 68 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூஸ் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 113 ரன்கள் விளாசினார்.

265 ரன்கள் இலக்கு

265 ரன்கள் இலக்கு

மேத்யூஸின் அதிரடியான சதத்தால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார். 265 என்ற இலக்கை நோக்கி களம் இறங்கியது இந்தியா.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

தொடக்க ஜோடியாக களம் கண்டது ரோகித், ராகுல். இருவரும் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்தனர். துவக்கம் முதலே அதிரடியை துவங்கிய ரோகித் சர்மா 46 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

5வது சதம்

5வது சதம்

மறுமுனையில் அவருக்கு துணைநின்றார் ராகுல். அரைசதத்துக்கு பிறகு பவுண்டரிகளாக விளாச துவங்கிய ரோகித், 93 பந்துகளில் பவுண்டரி அடித்து இத்தொடரின் 5வது சதத்தை பூர்த்தி செய்தார்.

ரோகித் சாதனை

ரோகித் சாதனை

இதன்மூலம் உலக கோப்பையில் ஒரே தொடரில் 5 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, ஒரு உலக கோப்பை தொடரில் 4 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதனை ரோகித் சர்மா தகர்த்துள்ளார்.

கோலி, ராகுல் ஜோடி

கோலி, ராகுல் ஜோடி

சதமடித்த உடன் ரஜிதா பந்தில் ஆட்டமிழந்தார் ரோகித். அடுத்து களத்துக்கு வந்தார் கோலி. ராகுலுடன் கைகோர்த்தார். ரன்கள் வந்தன. இளம் வீரர் ராகுலும் சதம் அடித்து அசத்தினார். இறுதி கட்டங்களில் இருவரும் இலங்கை பந்துவீச்சை வெளுத்து தள்ளினர். 111 ரன்கள் எடுத்த ராகுல் மலிங்கா பந்தில் வீழ்ந்தார்.

7 விக். வித்தியாசத்தில் வெற்றி

7 விக். வித்தியாசத்தில் வெற்றி

3வது விக்கெட்டுக்கு வந்தார் ரிஷப் பன்ட். வெறும் 4 ரன்களுடன் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இறுதியில், 43.3 ஓவர்களில் 265 ரன்கள எடுத்து 7 விக். வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா. இலங்கை வெற்றியை தொடர்ந்து 15 புள்ளிகளுடன் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது. ஆஸி. 2ம் இடத்தில் உள்ளது. ஒருவேளை தென் ஆப்ரிக்காவை அந்த அணி வீழ்த்தினால் மீண்டும் முதலிடம் பெறும்.


Recommended For You

About the Author: Editor