ஜப்பானை சென்றடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி!

Yஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சற்றுமுன்னர் அந்நாட்டினை சென்றடைந்துள்ளார்.

14 மணிநேர விமான பயணத்தினை மேற்கொண்டு இன்று (சனிக்கிழமை) ஜப்பானின் டோக்கியோ விமான நிலையத்தை அடைந்த அவருக்கு அந்நாட்டு உயர் அதிகாரிகள் சிறந்த வரவேற்ப்பினை வழங்கியுள்ளனர்.

4 நாட்கள் உத்தியோக பயணம் மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி ட்ரம்பின் விஜயத்தில் அவருடைய பாரியார் மெலனியா ட்ரம்ப்பும் கலந்துகொண்டுள்ளனர்.

அந்தவகையில் அந்த நாட்டின் புதிய பேரரசரை சந்திக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். மேலும் உலகத் தலைவர் ஒருவர் பேரரசரை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor