பிள்ளையார் ஆலயத்துள் அடாவடியாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெரும்பான்மை இனத்தவரின் வாகனம்!!

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த – பெரும்பான்மை இனத்தவரான வழக்கறிஞர் ஒருவரின் வாகனம் இது! 

ஆலய வளாகத்தில் அடாத்தாக குடியிருக்கும் பௌத்த பிக்குவின் சட்ட விடயங்களை கையாளும் வழக்கறிஞர் இவராம்?

பகல்பொழுது அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு மரநிழலில் – நிலவிரிப்பிடுவதற்காக, இந்த வாகனத்தை சற்றே அகற்றி நிறுத்துவதற்கு கேட்டு விழா ஒழுங்கமைப்பாளர்கள் சுமார் அரைமணிநேரம் வாதிட நேர்ந்தது?
விளைவு : மறுப்பு! மறுப்பு மட்டும்!!

போலீஸ் பாதுகாப்புடன் வாகனம் அசையமறுத்து அங்கேயே நிற்க பாதிப்பேர் வெயிலில் அமர அன்னதானம் ஆரம்பமாகியது.

ஆனைமுகன் திருவருளோ – அடியவர் குறும்பருளோ, சற்று நேரத்தில் லோயரின் காரில் “தமிழ்” என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது. 


Recommended For You

About the Author: Editor