இலங்கைக்கு அண்மையில் நிலநடுக்கம்!!

இலங்கைக்கு அருகில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி சூரியகுமார் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 5.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலையில் இருந்து 600 கிலோ மீற்றர் தூரத்தில் வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor