6 பொலிஸ் உயர் அதிகாரிகள் விரைவில் கைது!

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட உயர் பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆறு பேர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் பற்றிய விபரங்கள் தெரிந்திருந்தும் அவை தொடர்பில் தங்களது கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறியதாக குறித்த அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், மேல் மாகாண வடக்கு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், நீர் கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட அத்தியட்சகர் உள்ளிட்ட சிலரே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்

சட்ட மா அதிபர் தப்புல லிவேராவின் பரிந்துரைக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor