அதிகமான மக்கள் மதம் மாற்றப்பட்டனர் -ரத்னதேரர் அதிரடி!!

இந்து- பௌத்த மக்கள் 90,000க்கு மேற்பட்டோர் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதுரலிய ரத்தன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“பாடசாலைக்கு செல்லும் வயதுடைய பிள்ளைகள் திருமணம் செய்யப்பட்டு முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்படுவது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முரணாகும்

ஆகையால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் திருமணம் செய்துக்கொள்வதனை தடை செய்யும் வகையில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அந்தவகையில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் இவ்விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளதோடு அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளோம்.

இந்து, பௌத்த மக்கள் 90,000க்கு மேற்பட்டோர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளனர்.

அவர்கள் மீண்டும் தங்களுடைய மதத்தினை தழுவுவதற்கு விரும்பினால், அதற்காக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்துக்கொடுக்க எதிர்பார்க்கின்றோம்.

மதராஷா பாடசாலையில் மதம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவது குறித்து கற்றுக்கொடுப்பதாக கூறப்படுகிறது. அது முற்றிலும் தவறாகும்.

ஆனால் அங்கு கற்றுக்கொடுக்கப்பட்டது முற்றிலும் அரபி மொழியும் முஸ்லிம் அடிப்படைவாதமும் ஆகும்” என அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: Editor