ஞானசார தேரருக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு!!

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் தூண்டப்படுவதாக குற்றம் சுமத்தியே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுவிடச்ர்லாந்தில் இயங்கி வரும் எஸ்.ரீ.பீ. என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக முஸ்லிம் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

கலகொடத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும் முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் ஓர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம், இந்த தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் கிறிஸ்தவர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor