கனடா, அமெரிக்காவில் பாரிய நில நடுக்கம்!!

அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தின் தென்பகுதியில் இரண்டு தடவைகள் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை ஏற்பட்ட நில நடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் பதிவாகியமையினால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கட்டடங்கள் மற்றும் வீடுகள் ஆட்டம் கண்டதாகவும் மக்கள் வீதியில் நிற்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

20 ஆண்டுகளுக்கு பின்னர் கலிபோர்னியாவை தாக்கிய மிகப்பெரிய நில நடுக்கமாக இது பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கலிபோர்னியா நேரப்படி கடந்த ஒன்றரை மணித்தியாலத்திற்கு முன்னர் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கத்தினால் பாரிய சேதங்கள் ஏற்பட்ட நிலையில் தீ விபத்துக்களும் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சுமார் 3000 வீடுகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது குறித்த பகுதிகளில் மின்றார தடை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்குள்ள கட்டடங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கனடாவில் வான்கோவர் தீவின் வடகடலோர பகுதியில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இது ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 5 புள்ளிகள் என பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.


Recommended For You

About the Author: Editor