அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பஹாமா தீவில் இருந்து தனியார் ஹெலிகொப்டர் ஒன்று புளோரிடா மாநிலத்துக்கு புறப்பட்டது.

அந்த ஹெலிகாப்டரில் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வர் கிரீஸ் கிரைன் மற்றும் அவரது மகள் உள்பட மொத்தம் 7 பேர் பயணித்துள்ளனர்.

கிராண்ட் கே என்ற தீவு பகுதியை கடந்தபோது ஹெலிகொப்டர் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி கடலுக்குள் விழுந்தது.

தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எனினும், மீட்பு குழு வருவதற்கு முன்னர் ஹெலிகாப்டரில் இருந்த கிரீஸ் கிரைன் மற்றும் அவரது மகள் உள்ளிட்ட அனைவரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தநிலையில் ஹெலிகொப்டர் விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor